புரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

02/12/2020

புரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

 


சென்னை

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் நகரும் வேகம்  15 கி.மீட்டராக குறைந்து உள்ளதுஇந்நிலையில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது. 
ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது உள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு புரெவி புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. 
கடற்கரை மாவட்டமான தூத்துக்குடியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் இரண்டு குழுக்கள்  நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459