சி.இ.ஓ., அலுவலகத்தில் 'ரெய்டு' - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

31/12/2020

சி.இ.ஓ., அலுவலகத்தில் 'ரெய்டு'

 

முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத, ஒரு லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (சி.இ.ஓ.,) இருப்பவர் உஷா. இவர், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு, 8:00 மணியளவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உட்பட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள முதன்மை கல்வி அலுவலரின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சி.இ.ஓ., உஷா மற்றும் அலுவலர்களிடம், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் இன்று வழக்குப்பதிவு உள்ளனர்.

No comments:

Post a Comment