அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் - அமைச்சர் செங்கோட்டையன். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.


 தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்; ஆட்சேபம் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% குறைப்பு மட்டும்நிரி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும்  என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 


தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment