அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு

 


தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் ஆன்- லைனில் பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.


மேலும், இதுவரையில் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே செமஸ்டர் தேர்வுகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான அட்டவணையை உயர்கல்வித்துறையிடம் அளித்துள்ளன. அதன்படி தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே நடத்த திட்டமிடப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள உயர்க ல்வித்துறை அதிகாரிகள், அனைத்து பல்கலை.களிலும் நடப்பு செமஸ்டருக்கான தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a comment