பொதுத் தேர்வு எழுத்துத்தேர்வாகதான் நடக்கும் ஆன்லைன் தேர்வாக அல்ல! சிபிஎஸ்இ அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பொதுத் தேர்வு எழுத்துத்தேர்வாகதான் நடக்கும் ஆன்லைன் தேர்வாக அல்ல! சிபிஎஸ்இ அறிவிப்பு

 


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நவம்பர் 2 புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி, தேர்வுக்கு முன் நடைமுறை வகுப்புகளில் (Regular classes) கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு மாற்று மதிப்பீட்டு முறைகள் ஆராயப்பட வேண்டும், அதே நேரத்தில் ஆன்லைனில் எந்தவொரு தேர்வும் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது வாரிய (Board Exams) தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவை எப்போது நிகழ்ந்தாலும் எழுத்து முறைமையில் மட்டுமே நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் மேலும் கூறியுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு practical Exams ஜனவரி மற்றும் பிப்ரவரி- 2021 மாதங்களில் நடைபெறும் என்பது தவறான தகவல் என சிபிஎஸ்சி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வுகள்  ஆன்லைன் வழியாக நடத்தப்படாது என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a comment