தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - ஆசிரியர் மலர்

Latest

01/12/2020

தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி


டிச.1, 2020, 14:38[]சென்னை: புரேவி புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். வங்கக் கடலில் உருவாக உள்ள புரேவி புயல், இலங்கை அருகே கரையைக் கடந்து, கன்னியாகுமரி பகுதியை கடந்து, அரபிக்கடலில் மறுபடியும் புதிதாக புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, அது தீவிரத்தோடுதான், தமிழகத்தின் தென் மாவட்டங்களை கடந்து அரபிக் கடலுக்கு செல்லும். இலங்கையில் கரையை கடந்து, தமிழகத்தின் வழியே பயணிக்கும் புரேவி புயல்.. தென் மாவட்டங்களில் அலர்ட்முதல்வர் ஆலோசனைஇந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும், மேலும் பல தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி முதல்வர் தலைமையில் இன்று தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.வெளியே செல்ல வேண்டாம்இதையடுத்து முதல்வர் பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், கூறியிருப்பதாவது: டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெரு மழை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.மீனவர்கள் திரும்ப வேண்டும்ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். அண்டை மாவட்டங்களில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் அந்தந்த மாநிலங்களில் கரை ஒதுங்க வேண்டும். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அண்டை மாநில அரசுகளிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதால், பொதுமக்கள் புயல் தொடர்பாக அச்சப்பட வேண்டாம்.ரேஷன் கார்டுகள் உஷார்மழை அதிகரித்து வீடுகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ரேஷன் கார்டு, கார்டு ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பொதுமக்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். அதே நேரம், நாளை, டிசம்பர் 2ம் தேதி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதீத கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459