பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

30/12/2020

பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு


 பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு

Click here to download pdf

மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 1354 விடுதிகள் ( 1099 பள்ளி விடுதிகள் - 255 கல்லூரி விடுதிகள் ) தற்போது செயல்பட்டு வருகின்றன என்றும் விடுதிகளை சுத்தமாகவும் , சுகாதாரமாகவும் வைத்திருக்கும் பொருட்டும் , மாணவ , மாணவிகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும் 100 மாணவ , மாணவியர்களுக்கு மேல் தங்கிப் பயிலும் 66 விடுதிகளுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் முழுநேர துப்புரவாளர்களை நியமனம் செய்தும் , 100 மாணவியர்களுக்கு குறைவாக உள்ள விடுதிகளில் ரூ .2000 / - தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேர துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்தும் ஆணையிடப்பட்டது என்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ .2000 / -த்திலிருந்து ரூ .3000 / உயர்த்தப்பட்டது என்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் தெரிவித்துள்ளார் . மாணவ 2 3. மேலும் , பகுதிநேர துப்புரவு பணியாளர் பணியிடங்கள் வேலை வாய்ப்பகம் மூலமே நிரப்பப்படுகின்றன என்றும் மாதம் ரூ . 3000 / - என மிகக் குறைந்த தொகுப்பூதியம் பெற்று வருவதால் , பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் மிகுந்த சிரமமான சூழ்நிலையில் உள்ளதாகவும் , மேற்காணும் பணியாளர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டாலும் பணி நிறைவு செய்து வீடு திரும்புவதற்கு ஒருநாள் ஆகிவிடுவதால் இவர்கள் வேறு பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது என்றும் இப்பணி பகுதிநேரப்பணி என்பதால் , அவர்கள் இப்பணியை துறந்துவிட்டு கூடுதலாக வருமானம் உள்ள தொழிலுக்கு சென்றுவிடும் நிலை உள்ளது என்றும் தெரிவித்து , இத்துறை விடுதிகளில் பணிபுரியும் 517 பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும் மேற்கண்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாகவும் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார் . அரசு 4. பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் பரிந்துரையை நன்கு கவனமுடன் ஆராய்ந்து , மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சரின் அறிவிப்பினை செயற்படுத்த ஏதுவாக அதனை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களின் சுகாதாரத்தை கருத்திற் கொண்டும் , விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தினை கருதியும் துப்புரவாளர் பணியிடம் இன்றியமையாதது என கருதப்படுவதால் , 01.03.2020 அன்றுள்ளபடி , பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இணைப்பில் கண்டுள்ள 517 பகுதிநேர துப்புரவு பணியாளர்களை , இவ்வரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து , ரூ.4,100- ரூ .12,500 என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் ( Special Time Scale of pay ) முழுநேர துப்புரவு பணியாளர்களாக பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது 


புதிய அரசாணைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்


Join Telegram: Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459