டிச. 7-ல் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டுதல் நெறிமுறைகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

டிச. 7-ல் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டுதல் நெறிமுறைகள்


டிசம்பர் 7-ஆம் தேதிமுதல் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் மூடப்பட்டிருந்த உயர்கல்வி நிறுவனங்கள் வரும் 7-ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதில், முகக்கவசம் அணிந்தபடியே 50 சதவிகித மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 6 நாள்களுக்கு கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறிகள் இருக்கும் மாணவர்களுக்கு அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரி விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும். கல்லூரிக்கு அருகேவுள்ள உறவினர்கள் வீட்டில் மாணவர்கள் தங்கிக்கொள்ளலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment