என்ன கொடுமை சார் இது... பழைய இரும்பு கடையில்... எடைக்கு போடப்பட்ட 5,000 புதிய பள்ளி பாட புத்தகங்கள்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

என்ன கொடுமை சார் இது... பழைய இரும்பு கடையில்... எடைக்கு போடப்பட்ட 5,000 புதிய பள்ளி பாட புத்தகங்கள்!


மயிலாடுதுறை: பழைய இரும்பு கடையில் அரசு மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை எடைபோட்டு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கின் இளநிலை உதவியாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். .புதிய புத்தகங்கள் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலை என்ற இடத்தில் பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பழைய நோட்டு புத்தகங்கள் எடைக்கு வாங்கும் கடை உள்ளது. இந்த கடையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அரசு பாடப்புத்தகங்கள் கட்டுக்கட்டாக கொண்டுவந்து நேற்று இரவு சிலர் எடைக்கு போட்டு விட்டு சென்றுள்ளனர்.2 பேர் கைதுஇது குறித்து வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் அதிகாரிகள் இரும்பு கடையில் சோதனை நடத்தினர். அப்போது, 2019 - 2020- ஆம் கல்வி ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.மேலும், மாவட்ட கல்வி அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கின் இளநிலை உதவியாளர் மேகநாதன் மற்றும் கடை உரிமையாளர் பெருமாள்சாமி ஆகியோரை கைது செய்தனர்.கண்டனம்ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்களை பழைய புத்தக கடையில் எடை போட்டு விற்பனை செய்து உள்ளது கல்வித் துறையில் நிலவும் சீர்கேடு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

No comments:

Post a Comment