ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் புதிய விதிமுறை - ஆசிரியர் மலர்

Latest

24/12/2020

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் புதிய விதிமுறை


 மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி (கோப்புப்படம்)

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது
.

தில்லியில் காணொலி நிகழச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது, புத்தாண்டு முதல் நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்.
 
இதன் மூலம் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டணத்தை செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இதன்மூலம் நேரத்துடன் எரிபொருள் செலவும் சேமிக்கப்படுகிறது.

நான்கு வங்கிகளின் உதவியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு பாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு 7 லட்சம் பாஸ்டேக் வழங்கப்பட்டன. 2018-ஆம் ஆண்டு இது 34 லட்சமாக அதிகரித்தது.

தற்போது அனைத்து வாகனங்களுக்கும் அல்லது 2017 டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459