01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 



அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி / தையல் இசை ஓவியம் ஆகிய சிறப்பாசிரியர் முறையான நியமனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் ( As on date vacancies ) 01.12.2020 அன்றைய நிலவரப்படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் Excel Format - Arial font ( English ) பூர்த்தி செய்து சி 5 பிரிவு மின்னஞ்சல் ( c5sec.tndse@nic.in ) முகவரிக்கு உடன் 22122020 மாலைக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ள குறிப்பிற்கான கலத்தில் ( Remarks Column ) எந்த தேதி முதல் காலியாக உள்ளது என்பதை ( ஓய்வு பெற்ற நாள் மாறுதலில் சென்ற நாள் இதர காரணங்கள் etc. ) தெளிவாக அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . மேலும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் , எந்த காலிப்பணியிடங்களும் விடுபடவில்லை என்ற சான்றுடன் , காலிப்பணியிட விவரங்களை அஞ்சல் வழியாகவும் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . இதில் ஏதும் பிறழ்தல் ஏற்படின் முதன்மைக் கல்வி அலுவலரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் எனவும் அனைத்து முதன்மைகல்விக் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


Proceedings - Download here...


No comments:

Post a comment