ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - CEO செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

15/11/2020

ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - CEO செயல்முறைகள்

 


IMG_20201114_055326

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக் கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதால் திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் , பொன்னேரி , ஆவடி , அம்பத்தூர் மற்றும் திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையினை EMIS ல் பதிவேற்றம் செய்து கீழ்காணும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

1. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்கள் விவரங்களையும் EMIS ல் பதிவேற்றம் செய்த மாணவர்களின் எண்ணிக்கை விவர பட்டியல் , ( EMIS ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் நிர்ணயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . ) 

2. பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் EMIS ல் பதிவேற்றம் செய்யும்போது சார்ந்த ஆசிரியர்களின் பாடங்களை தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படவேண்டும் . பாடங்களின் உட்பிரிவினை கண்டிப்பாக பதிவேற்றம் செய்யக்கூடாது ( இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , விலங்கியல் , வரலாறு , புவியியல் ) , 

3. மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியரின் மாற்றுத் திறனாளி சான்றினை இரண்டு நகல்கள் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் பெற்று தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459