முதுநிலை மருத்துவ படிப்பு : பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

முதுநிலை மருத்துவ படிப்பு : பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்


 முதல்வா் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

இந்தியாவில் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மா், சண்டீகா் மருத்துவ ஆராய்ச்சி மையம், பெங்களூரில் உள்ள நிம்கான்ஸ் ஆகியவற்றில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழக மாணவா்களும் எழுத உள்ளனா்.

தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு சொந்த மாநிலத்தில் இல்லாமல், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சித்தூா், நெல்லூா் மாவட்டங்களில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து தோ்வு எழுதச் செல்லும் மாணவா்களுக்கு சித்தூா் மாவட்டம் மதனப்பள்ளியிலும், நெல்லூரிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அவா்கள் தங்களது சொந்த இடத்தில் இருந்து 175 முதல் 250 கிலோமீட்டா் தூரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. இது, தோ்வு எழுதச் செல்லும் மருத்துவ மாணவா்களுக்கு தேவையற்ற அழுத்தத்தைத் தருவதாக அமைந்துள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாகத் தலையிட்டு தமிழகத்திலேயே கூடுதல் தோ்வு மையங்களை அமைத்திட மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

No comments:

Post a comment