முதுநிலை மேலாண்மை படிப்பில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வு நாளை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

முதுநிலை மேலாண்மை படிப்பில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வு நாளை

  


தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேர கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு, நாடு முழுவதும் நாளை (நவ.29) நடைபெற உள்ளது.இந்தத் தேர்வு 159 நகரங்களில் 430 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு 3 ஷிஃப்டுகளில் நடைபெறுகிறது. குறிப்பாக காலை 8.30 மணியில் இருந்து 10..30 மணி காலை ஷிஃப்டிலும் மதியம் 12.30 முதல் 2.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.

கேட் தேர்வுக்காக இந்த ஆண்ட் 2.28 லட்சம் தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர். கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு 96.15 சதவீதத் தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

https://iimcat.ac.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டைப் பதிவ் செய்துகொள்ளலாம். தேர்வு நடைமுறைகள் தொடர்பான வீடியோவும் இந்த முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment