வேளாண் பல்கலைக்கழகத்தில் இணையவழி மூலம் கலந்தாய்வு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

வேளாண் பல்கலைக்கழகத்தில் இணையவழி மூலம் கலந்தாய்வு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு இணையவழி மூலம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

கலந்தாய்வு குறித்து வேளாண் பல்கலை. வெளியிட்ட செய்தியில்,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கான நடப்பாண்டு இளநிலைப் படிப்பிற்கு கலந்தாய்வு இணையவழி மூலம் நடத்தப்படும்.

இதில், பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு நவம்பர் 26 முதல் 28 வரையும், சிறப்புப் பிரிவிற்கான கலந்தாய்வு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் மருந்துவ படிப்பிற்கான கலந்தாய்வுக் கூட்டம் நேரில் நடைபெற்று வரும் நிலையில் வேளாண் பல்கலைக்கழகம் இணையவழி மூலம் கலந்தாய்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment