ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி - ஆசிரியர் மலர்

Latest

27/11/2020

ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி

 


ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான கியூ.எஸ். நிறுவன தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது

ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான கியூ.எஸ். நிறுவன தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது ஐஸசென்னை:

கியூ.எஸ். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் மற்றும் ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை வெளியிடுகிறது. அவ்வகையில், 2020ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி மற்றும் சென்னை ஐஐடி ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 37வது இடத்தை மும்பை ஐஐடியும்,  47வது இடத்தை டெல்லி ஐஐடியும், 50வது இடத்தை சென்னை ஐஐடியும் பெற்றுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் இரண்டாவது ஆண்டாக டாப்-50 இடத்தை தக்க வைத்துள்ளன.  
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 
பெங்களூரு தேசிய அறிவியல் மையம் 56வது இடத்தையும், ஐஐடி காரக்பூர் 58வது இடத்தையும் பிடித்தது. இதேபோல் டெல்லி பல்கலைக்கழகம் (71), ஐஐடி கான்பூர் (72), ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (81) ஆகிய கல்வி நிறுவனங்களும் டாப்-100 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 
இது தொடர்பான செய்தியை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டரில் பதிவிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நமது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459