மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது ஆபத்தானது -மு.க.ஸ்டாலின் - ஆசிரியர் மலர்

Latest

11/11/2020

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது ஆபத்தானது -மு.க.ஸ்டாலின்

 


கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் 2-வது அலை உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது ஆபத்தானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, நேரடி கவுன்சிலிங் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்2-ஆவது அலை அச்சம் நிலவும் சூழலில் நேரடி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது ஆபத்தானது!

இதுகுறித்து @Vijayabaskarofl-ம், @CMOTamilNadu-ம் சிந்தித்தார்களா?

மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையும் நேர்மை, வெளிப்படைத் தன்மையுடன் ஆன்லைன் கவுன்சிலிங் மூலமே நடத்தப்பட வேண்டும்!

— M.K.Stalin (@mkstalin)
November 11, 2020

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. அதோடு, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்.பி.பி.எஸ். இடங்களும், 690 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இந்தக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிர்பார்த்தபடி பயனளிக்கும் வகையில் நடத்த வேண்டும்.

கடந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த 218 மாணவர்கள், தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றனர். நீட் தேர்வில் 18 பேர் ஆள் மாறாட்டம் செய்ததாக, சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்தது. ஆதார் தகவல்களை வைத்து அவர்களை சி.பி.சி.பி.ஐ.டி. போலீஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை. “எங்களிடம் அவர்களது தகவல்கள் இல்லை” என்று ஆதார் முகமையும் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், கொரோனா பரவல் 2-ம் அலை உள்ள நிலையில், இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடி கவுன்சிலிங் நடத்துவது மிகவும் ஆபத்தானது. மாணவர்களின் பாதுகாப்பு மிகமிக முக்கியம். அதேபோன்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை மிகமிக முக்கியம் என தெரிவித்துள்ளார். 
 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459