தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

09/11/2020

தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் தொடக்கம்


 கோப்புப் படம்.பள்ளிகளை திறப்பது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று காலை தொடங்கியது. 

தமிழகத்தில் கரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்தநிலையில் வரும் நவ.16-ஆம் தேதியில் இருந்து 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் திங்கள்கிழமை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உத்தரவிட்டது. 

அதன்படி பள்ளிகளை திறப்பது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று காலை தொடங்கியது. தனிமனித இடைவெளியுடன் சென்னையில் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை கூறுகின்றனர். கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் பள்ளிகள் திறப்பு பற்றி கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை தெவிக்கலாம். 

சென்னையில் சில பள்ளிகளில் கேள்விகள் அச்சிடப்பட்ட காகிதத்தில் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து சேகரிக்கப்பட்ட படிவங்கள் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னா் பெரும்பான்மையான பெற்றோரின் கருத்துகளின் அடிப்படையில் திட்டமிட்ட நாளில் பள்ளிகளைத் திறக்கலாமா அல்லது பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திவைக்கலாமா என்பது குறித்து அரசு முடிவுவெடுக்கும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459