நீதிமன்ற வழக்குகளில் தேவையற்ற காலதாமததால் ஏற்படும் நிதி இழப்புகளை இனி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்படும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

07/11/2020

நீதிமன்ற வழக்குகளில் தேவையற்ற காலதாமததால் ஏற்படும் நிதி இழப்புகளை இனி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்படும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

 


பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக தொடரும் வழக்குகள் மீது உரிய காலக் கெடுவிற்குள் துரித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் நேர்வில் தீர்ப்புகள் பெறப்படுகின்றன.


 அவர்களின் மீது தொடர்புடைய விதிகளை குறிப்பாக சுட்டிக்காட்டி தெளிவாக மேல்முறையீடு சீராய்வு மற்றும் சிறப்பு விடுப்பு மனு ஆகியவை உடனுக்குடன் தாக்கல் செய்யப்படாமல் நிர்வாக நலனுக்காக மூன்றாக திட்டமிட்டே காலம் தாழ்த்தி தாக்கல் செய்யும் நிலையில் நீதிமன்றங்களால் அவை ஏற்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்படுவதால் பல்வேறு வழக்குகளில் அரசுக்கு வீணான நிதி இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது அவ்வாறான தீர்ப்புகளை பின் தொடர்ந்து பலரும் வழங்குகின்றனர்

இம்மாதிரியான அலட்சியமான செயல்பாடுகளால் அரசு அளவில் உயர் அலுவலர்களுக்கு அவப்பெயர் ஏற்படும் தோடு நிர்வாகத்திலும் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.


 எனவே இனிவரும் காலங்களில் அலுவலர் மற்றும் பணியாளர்கள் கவனக்குறைவால் துறைக்கு பாதகமான தீர்ப்பு பானைகள் பெறப்படும் நேர்வுகளில் தொடர்புடைய வழக்குக்கு ஆகும் செலவினம் தொகையுடன் அரசுக்கு ஏற்படக்கூடிய நிதி இழப்பு முழுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இடம் இருந்து பெறப்படும் என்பதுடன் ஒவ்வொருவருக்கும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் முழு பொறுப்பு பொறுப்பாளர் ஆவார்கள் எனவும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது இதில் எவ்வித விளக்கங்களும் ஏற்கப்பட மாட்டாது



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459