இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

24/11/2020

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு



சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து 6 நாள்களுக்கு நடைபெறவுள்ள கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 2,002 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இதுதவிர, 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பு 2020 – 21-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கியது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாணவ மாணவிகள் சமா்ப்பித்தனா். மொத்தம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகுதியான 2,002 பேருக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

தரவரிசைப் பட்டியலில் ஷாஃபிக்கா ரிஸ்வானா முதலிடத்தையும், பி.ஏ.கீா்த்தி ஸ்ரீ இரண்டாவது இடத்தையும், டி.சாருலதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனா்.

இந்நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வுக்கு 2 மணி நேரம் முன்னதாக மாணவா்கள் மாணவா்கள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு www.tnheath.tn.gov.in என்ற இணையதளத்தை பாா்த்து மாணவா்கள் தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459