சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு குவிந்த பாராட்டுக்கள் - ஆசிரியர் மலர்

Latest

19/11/2020

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு குவிந்த பாராட்டுக்கள்

 


திருவண்ணாமலை: சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மாணவி வினிஷாவின் முயற்சிகளுக்கு அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து அனைத்து ஒத்துழைப்பும் தந்து ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுற்றுச்சூழலை காக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி வாகனத்தை வடிவமைத்திருக்கிறார் வினிஷா. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை... உதயநிதி ஸ்டாலின் 100 நாள் பிரச்சாரப் பயணம்..!புதிய கண்டுபிடிப்புதிருவண்ணாமலையை சேர்ந்த உமாசங்கரின் மகள் வினிஷா அதே பகுதியில் உள்ள எஸ்.கே.பி. இண்டர்நேஷனல் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பாடங்களை மனப்பாடம் செய்தோமா, மதிப்பெண் பெற்றோமா என்றில்லாமல் சமூகம் மீதான தனது அக்கறையால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதில் வினிஷா எப்போதும் ஆர்வம் உடையவர்.சுற்றுச்சூழல்கரித்துண்டுகளுக்கு மாற்றாக சூரிய சக்தியை கொண்டு செயல்படும் இஸ்திரி பெட்டியை வடிவமைத்த வினிஷாவின் திறமையை கவுரவிக்கும் பொருட்டு ஸ்வீடன் அரசு பட்டயம், பதக்கம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் பணமும் வழங்கியுள்ளது. இதனை ஸ்வீடன் நாட்டு துணை பிரதமர் இசபெல்லா காணொலி நிகழ்வு மூலம் வழங்கியுள்ளார்.பாராட்டுமாணவி வினிஷாவின் திறமையை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்தாண்டு அறிதிறன் மின் விசிறியை கண்டறிந்ததற்காக அப்துல்கலாம் இக்னைட் விருதும் இவர் பெற்றிருக்கிறார்.பெயர் பரிந்துரைஇந்நிலையில் தற்போது பிரதமரின் ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு வினிஷா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு கோழிப்பண்ணைகளை போல் செயல்படும் பள்ளிகளுக்கு மத்தியில் இது போன்று சமூகத்துக்கு பயனான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது எஸ்.கே.பி. இண்டர்நேஷனல் 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459