தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

 


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது.
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது. 
மாவட்டத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் இதுவரை 166 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
மேலும், கனமழை வாய்ப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

Author Details

One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates