முதல் நாள் கவுன்சிலிங்கில் எத்தனை பேருக்கு இடம் -- மருத்துவ கல்வி இயக்ககம் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

18/11/2020

முதல் நாள் கவுன்சிலிங்கில் எத்தனை பேருக்கு இடம் -- மருத்துவ கல்வி இயக்ககம் விளக்கம்

 


2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின.

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியிருந்தார்.
அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு தொடங்கியது. 
இன்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
இன்று நடைபெற்ற கலந்தாய்வுக்கு 270 மாணவ- மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 262 பேர் கலந்தாய்வில்  கலந்து கொண்டனர். இவர்களில் 235 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. 27 பேர் காத்திருக்கும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மருத்து கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459