தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும், ரேஷன் கடைகளையும் அந்தந்த ஊராட்சிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட வேண்டும். : கிருஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் அவர்களின் கருத்திற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும், ரேஷன் கடைகளையும் அந்தந்த ஊராட்சிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட வேண்டும். : கிருஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் அவர்களின் கருத்திற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு


, “கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஊராட்சிகளுக்குக் கூடுதல் உரிமையும், அதிகாரமும் தர வேண்டும். குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும், ரேஷன் கடைகளையும் அந்தந்த ஊராட்சிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும்.

அப்போதுதான் அந்தந்த ஊர் மக்களே பள்ளிகளை நிர்வகிக்க முடியும். ஆசிரியர்களைக் கண்காணிக்க முடியும். ஜி.எஸ்.டி. வரியைக் கொடுத்துவிட்டு மத்திய அரசிடம் மாநிலங்கள் கையேந்தும் நிலையை மாற்ற, வரி வசூலை மாநில அரசே செய்து மத்திய அரசுக்குரிய பங்கைக் கொடுக்க வேண்டும்.” என்பன உள்பட 17 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு  கிருஸ்துதாஸ் காந்தி தனது பேட்டியில் கூறினார்.

No comments:

Post a comment