சமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு


திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 28 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 3-ஆம் தேதி தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இதில் சமையலர் பணிக்கு மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்காக மாத சம்பளமாக ரூ 15,700 வழங்கப்படுகிறது. அது போல் துப்புரவாளர் பணிக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்காக மாதம் ரூ 3000 ஊதியமாக வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்போருக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். எஸ், எடி விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணிக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்சமாக 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தகுதியானவர்கள் திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ பெற்று அந்த அலுவலகத்திலேயே டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு .. என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

No comments:

Post a comment