7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் 395 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் - ஆசிரியர் மலர்

Latest

12/11/2020

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் 395 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

 


7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் 395 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவப் படிப்புக்கு இதுவரை 34,427 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், 4,061 எம்.பி.பி.எஸ் இடங்கள் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார். வரும் 18 அல்லது 19ம்  தேதிகளில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

 

கொரோனா காலம் என்பதால் உரிய விதிமுறைகளுடன்  நாளொன்றுக்கு 500 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையின்போது விண்ணப்பங்களில் குளறுபடிகள் நடந்திடாத வண்ணம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 304 எம்.பி.பி.எஸ் இடங்கள், 91 பி.டி.எஸ் இடங்கள் என மொத்தம் 395 இடங்கள் கிடைக்கும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459