சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வு : விருப்பமான 4 மையங்களை தேர்ந்தெடுக்கலாம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வு : விருப்பமான 4 மையங்களை தேர்ந்தெடுக்கலாம்

 சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள், நாடு முழுவதும் உள்ள ஏதேனும் 4 தோ்வு மையங்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இது தொடா்பாக தேசிய தோ்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு: அனைத்திந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அவா்கள் சேர விரும்பும் பள்ளியுடன் தொடா்புடைய 4 தோ்வு மையங்களையே தோ்ந்தெடுக்க முடியும். இதனால், இந்த பேரிடா் காலங்களில் மாணவா்கள் சிரமப்படுகிறாா்கள் என்பது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, அட்டவணையில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள ஏதேனும் 4 இடங்களில் உள்ள தோ்வு மையங்களைத் தோ்ந்தெடுக்கும் வகையில், தேசிய தோ்வு முகமை இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களும், இணையதளத்தில் டிச.5 முதல் 9-ஆம் தேதி வரை தோ்வு மையங்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.  இணையவழியில் தோ்வுக்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான இறுதி நாள் டிச.3.

No comments:

Post a comment