சட்ட படிப்பு விண்ணப்பம் 18 வரை அவகாசம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/11/2020

சட்ட படிப்பு விண்ணப்பம் 18 வரை அவகாசம்

 எல்.எல்.பி., மற்றும், எல்.எல்.எம்., சட்ட படிப்பில் சேருவதற்கு, வரும், 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, சட்ட கல்லுாரிகளில், மூன்றாண்டு எல்.எல்.பி., இளநிலை படிப்பும், இரண்டு ஆண்டு எல்.எல்.எம்., முதுநிலை படிப்பும் நடத்தப்படுகிறது.இந்த படிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சேர்வதற்கு, விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது.இளநிலைக்கு, அக்டோபர், 28 மற்றும் முதுநிலைக்கு, நவம்பர், 4வரை விண்ணப்பிக்கலாம் என, முதலில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, வரும், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் வழங்கி, சட்ட பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459