வரி செலுத்துவோருக்கு திருப்பியளிக்கப்பட்ட ரூ. 1.36 லட்சம் கோடி - ஆசிரியர் மலர்

Latest

25/11/2020

வரி செலுத்துவோருக்கு திருப்பியளிக்கப்பட்ட ரூ. 1.36 லட்சம் கோடி


 இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வரி செலுத்துவோருக்கு ரூ. 1.36 லட்சம் கோடி அளவில் வரி திருப்பியளிக்கப்பட்டுள்ளதாக (டாக்ஸ் ரீபண்ட்) மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வரி செலுத்துவோருக்கு ரூ. 1.36 லட்சம் கோடி அளவில் வரி திருப்பியளிக்கப்பட்டுள்ளதாக (டாக்ஸ் ரீபண்ட்) மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 24-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்த பேர்களுக்கு, ரூ. 1,36,962 கோடி அளவில் வரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வருமான வரித்துறையானது குறிப்பிட்ட காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 39,28,067 கணக்குகளுக்கு, ரூ. 36,028 கோடியினையும், பெருநிறுவன வரி விதிப்பு முறையில் 1,96,880 கணக்குகளுக்கு ரூ. 1,00,934 கோடியினையும் திருப்பியளிதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள அனைத்தும் வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459