NEP'2020 இணையக் கருத்தரங்கம் : இணையம் வழி இணைய ஆசிரியர் சங்கம் அழைப்பு - ஆசிரியர் மலர்

Latest

04/10/2020

NEP'2020 இணையக் கருத்தரங்கம் : இணையம் வழி இணைய ஆசிரியர் சங்கம் அழைப்பு



*JFME அக்.4-ல் நடத்தும் NEP'2020 தொடர்பான இணையக் கருத்தரங்கம் - YouTube வழியே இணைய உறுப்பினர்களுக்கு TNPTF பொதுச்செயலாளர் அழைப்பு!*


_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ 


*வணக்கம்.*


🔥

🛡 அகில இந்திய அளவில் கல்விக்கான இயக்கங்களின் கூட்டமைப்பாக JFME (Joint Forum for Movement on Education) என்ற விரிவடைந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் அகில இந்திய அளவிலான ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், கல்வி நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகள் உள்ளிட்ட சமூக அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்கும் நம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் (STFI) இதில் அங்கம் வகிக்கிறது.


🔥

🛡 இக்கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில அளவிலான கூட்டம் கடந்த 11.09.2020 அன்று இணைய வழியாக நடைபெற்றது. 


🔥

🛡 அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தேசிய கல்விக்கொள்கை 2020 தொடர்பாக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் 04.10.2020 (ஞாயிறு) முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது.


🔥

🛡 இக்கருத்தரங்கில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகத் தனித்தனித் தலைப்புக்களில் தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக அக்கறை கொண்ட பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகின்றனர்.


🔥

🛡 இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆயிரக்கணக்கான நம் இயக்கத் தோழர்கள் பங்கேற்க வேண்டும். இந்தப் பொதுமுடக்கக் காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே சிறந்த கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை நம் இயக்கத் தோழர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.


🔥

🛡 இக்கருத்தரங்கை நேரலையில் காண்பதற்கான YouTube link கீழே கொடுக்கபட்டுள்ளது. Link-ஐ click செய்தால் நேரடியாக YouTubeக்குச் சென்று கருத்தரங்கில் எளிதாக இணைந்துவிடலாம்.


🎥 https://youtu.be/mv_nEUHNGRA


🔥

🛡 எனவே, வட்டார, மாவட்ட & மாநில நிர்வாகிகள் இச்செய்தியை அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்வு செய்து நம் இயக்கத் தோழர்களின் பங்கேற்பை உறுதி செய்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.


*இது நமது அமைப்பின் நிகழ்ச்சி!*


*நாம் அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி!*


_தோழமையுடன்;_

*ச.மயில்*

_பொதுச் செயலாளர்_

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459