ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.
கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார்.
தேவையற்ற மரணங்களை தவிர்க்கவும், அத்யாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சரியான நடைமுறையை கையாள்வது அவசியம் எனவும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக அறியப்பட்ட கொரோனா வைரஸ் (கோவிட் 19) தற்போதைய உலகம் முழுவதும் 4.18 கோடி பேருக்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சுமார் 11 லட்சம் பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். -Thanthi



No comments:
Post a Comment