மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச புத்தகம் காட்டுபவர் பயிற்சி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச புத்தகம் காட்டுபவர் பயிற்சி

 


மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச புத்தகம் கட்டுபவர் பயிற்சிபார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இலவசமாக புத்தகம் கட்டுபவர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ் இயங்கும், பூவிருந்தவல்லியிலுள்ள பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டுபவர் (ஆண்கள்/பெண்கள்) தொழிற் பயிற்சிப் பிரிவில், இலவச விடுதி வசதியுடன் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 2020-21 ஆம் நிதியாண்டிற்கான ஓராண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது. 

இப்பயிற்சி பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை-56 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பயிற்சியாளர்களுக்கு பயிற்சி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.300/- அளிக்கப்படும். இந்த ஆண்டுக்கான இப்பயிற்சியில் சேர்த்துக் கொள்வதற்கான கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு 31.08.2020 அன்று 14 வயதிலிருந்து 40 வயது வரையுள்ள, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியாக இருத்தல் வேண்டும். 

விண்ணப்பங்கள் பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை-56 மற்றும் அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 23 .10.2020 மாலை 5.45க்குள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர் – புலனாய்வாளர்,
பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம்,
பூவிருந்தவல்லி, சென்னை -600 056.
 

No comments:

Post a Comment