தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! - ஆசிரியர் மலர்

Latest

03/10/2020

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,622 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது.  

 

அதிர்ச்சியளிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: 

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது.  

 

அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை: 

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,596 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 5,58,534 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 46,255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

 

கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்: 

 

தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 6,14,507 பேரில் 3,70,963 பேர் ஆண்கள், 2,43,513 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 76,13,999 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 87,311 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

சென்னையில் கொரோனா பாதிப்பு: 

 

சென்னையில் 1,364 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,71,415 ஆக உயர்ந்துள்ளது.-News7

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459