சிக்னலுக்காக மலை உச்சியில் உட்கார்ந்து படிக்கும் மாணவர்கள்! - ஆசிரியர் மலர்

Latest

18/10/2020

சிக்னலுக்காக மலை உச்சியில் உட்கார்ந்து படிக்கும் மாணவர்கள்!

 

ஆன்லைன் கிளாசில் பங்கேற்க செல்போனில் சிக்னல் வேண்டும் என்பதற்காக மாணவர்கள் 3 கிமீ தூரம் நடந்து மலை உச்சியில் உட்கார்ந்து பாடம் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம்துறையூர் அருகே உள்ள பச்சை மலையில் தான் இப்படி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்கின்றனர். வண்ணாநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவமாணவிகள் உள்ளார்கள்.

தற்போது கொரோனா பரவல் அவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. மலை மீது ஏறி அங்கு கொட்டகை அமைத்து மாணவ மாணவியர்கள்அமர்ந்து படித்து வருகிறார்கள்.


இவர்கள் அருகிலுள்ள துறையூர் மற்றும் திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகல்லூரிகளில் ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள், பச்சைமலையை சுற்றி உள்ள மலை கிராமங்களில் பி.எஸ்.என்.எல்தொலைத்தொடர்பு சேவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. 100 அடி உயரமுள்ள மலைக்குன்றில் மட்டுமே தொலைதொடர்பு சேவை கிடைக்கிறது.

இதனால் அங்கு மரக்குச்சிகள் மற்றும் இலைதழைகளை கொண்டு தாங்களே தற்காலிக கொட்டகை அமைத்து படித்து வருகிறார்கள்இதற்காக 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பாடம் படித்துவிட்டுபின்னர் வீட்டுக்கு செல்கிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459