மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் : சென்னை தொடர்ந்து முதலிடம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் : சென்னை தொடர்ந்து முதலிடம்


 சென்னை: தமிழகத்திலேயே இன்று சென்னையில் அதிகபட்சமாக 1288 பேருக்கும், கோவையில் 397 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 240 பேருக்கும், திருவள்ளூரில் 226 பேருக்கும், திருப்பூரில் 159 பேருக்கும், நாமக்கல்லில் 148 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 147 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், கடலூரில் 150 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.சென்னையில் அதிகபட்சமாக இன்னும் 13,446 பேரும், கோவையில் 4,746 பேரும், செங்கல்பட்டில் 2,481 பேரும், சேலத்தில் 2,237 பேரும், தஞ்சாவூரில் 1,221 பேரும், திருவள்ளூரில் 1,621 பேரும், திருப்பூரில் 1,118 பேரும், நாமக்கல்லில் 1,050 பேரும், ஈரோட்டில் 1,063 பேரும், கடலூரில் 1,230 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.: புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 68 ஆக பதிவு!! மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில்தான் 1,79,424 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இங்கு 38,807 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்து கோவையில் 36,332 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சேலத்தில் 22,706 பேருக்கும், தேனியில் 15,490 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.மாநிலத்திலேயே இன்று குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேருக்கும், தென்காசியில் 14 பேருக்கும், விருதுநகரில் 20 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் மாநிலம் முழுவதும் 44,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

No comments:

Post a comment