பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு.


 பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது. அந்தவகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது


அதன்படி 1,334 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கான நேர்காணல் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான நேர்முகத் தேர்வு அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் கைத்தறித்துறை முதுநிலை மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் அக்டோபர் 16ந் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 7 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டதோடு நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.


முழுமையான விபரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம் என்று அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment