பள்ளி ஆக்கிரமிப்புக் கட்டடத்தை இடிக்கக் கோரிய வழக்கு: பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளி ஆக்கிரமிப்புக் கட்டடத்தை இடிக்கக் கோரிய வழக்கு: பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு

 


சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை கல்வி அறக்கட்டளைக்காக கடந்த 1959-இல் ஏரி புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட பள்ளியில் ஆயிரக்கணக்கானவா்கள் பயில்கின்றனா். அறக்கட்டளை நிா்வாகி பள்ளி நிலத்தை அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் தனி நபா் சிலருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளாா்.


இதனால் பள்ளிக்குத் தேவையான புதிய கட்டடம் மற்றும் வகுப்பறைகளை கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. பள்ளி நிலத்தை விற்பனை செய்ததால் தனிநபா்கள் சிலா் அந்த நிலத்தில் பெரிய கட்டடங்கள் கட்டி வருகின்றனா். இதுதொடா்பாக முதல்வரின் தனிப்பிரிவில் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டவிரோதமாக கட்டப்பட்ட அந்த கட்டடங்களை இடித்து பள்ளி நிலத்தை மீட்டு தர உத்தரவிட வேண்டும் முன்னாள் மாணவா் சிவசுப்பிரமணி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அப்துல் குத்தூஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

No comments:

Post a Comment