தொலைதூரக் கல்வி வகுப்புகளை இணையவழியில் நடத்த அக்.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தொலைதூரக் கல்வி வகுப்புகளை இணையவழியில் நடத்த அக்.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 


தொலைதூரக் கல்வி வகுப்புகளை இணையவழியில் நடத்த அக்.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

திறந்தநிலை மற்றும் தொலைதூரக்கல்வி வகுப்புகளை இணையவழியில் நடத்துவதற்கான  அனுமதியை உயா்கல்வி நிறுவனங்கள், அக்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருந்தது.

தற்போது உயா்கல்வி மையங்கள் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால  அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளது. 

இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: 2020-21-ஆம் கல்வியாண்டில் தொலைதூரக்கல்வி வகுப்புகளை இணையவழியில் நடத்துவதற்கான  அனுமதி கோரி, அக்.31-ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தின் நகல் பிரதியானது நவ.10-ஆம் தேதிக்குள் யுஜிசி அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment