தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணத்தில் 30% ரத்து: ஆந்திர அரசு - ஆசிரியர் மலர்

Latest

31/10/2020

தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணத்தில் 30% ரத்து: ஆந்திர அரசு

 


பெற்றோர்களின் பொருளாதார சிக்கலை சற்று குறைக்கும் வகையில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தில் 30% ரத்து செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்த விவகாரத்தை மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து, ஆந்திர மாநில பள்ளிக் கல்வி ஒழுங்காற்று ஆணையம் அளித்த பரிந்துரையையும் ஆராய்ந்து, 2020 – 21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 30 சதவீதத்தை ரத்து செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டதாக முதன்மைச் செயலாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவின் மூலம், அரசு உதவி பெறாத அனைத்துத் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும், இந்த கல்வியாண்டுக்கான 70 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், பள்ளிகள் இயங்குவதால் ஏற்படும் செலவுகளும் பராமரிப்புச் செலவும் பள்ளி நிர்வாகங்களுக்கு இல்லை என்பதையும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Source Dinamani

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459