276 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

276 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

 


சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி மாவட்டங்களைச் சேர்ந்த 276 மெட்ரிகுலேஷன் பள்ளி களுக்கு, தொடர் அங்கீகார ஆணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில்,சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று அம்பத்தூர், சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில், பள்ளிக்கல்வி,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்கீழ் செயல்படும் 65 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்கீழ் செயல்படும் 104 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என 169 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கினார்.

இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரகதொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர், பள்ளிக்கல்வி இயக்குநர்கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இயக்குநர் கருப்பசாமி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனிதா, வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் சென்னை பல்லாவரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் செங்கை, காஞ்சி மாவட்டங்களில் உள்ள 107 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர்அங்கீகார ஆணையை வழங்கினார்.

No comments:

Post a Comment