நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றம் முன்னேற்றம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றம் முன்னேற்றம்

 


நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்களும் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. தீபாவளி, கந்த சஷ்டி விரதம், திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படியும் திருக்கணித பஞ்சாங்கப்படியும் நடைபெறுகிறது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். நவம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியை பார்த்தால் குரு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்க, செவ்வாய் மீனம் ராசியில் வக்ர நிலையில் இருந்து நேர்கதிக்கு மாறுகிறார். ரிஷபத்தில் ராகு விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்கின்றனர்.சுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைந்திருக்கிறார் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். புதன் துலாம் ராசியிலும் மாத பிற்பகுதியில் விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 50% இடஒதுக்கீடு விவகாரம்.. நாடகமாடும் தி.மு.கவுக்கும் கடும் கண்டனம்: டிடிவி தினகரன்பதவியில் மாற்றம்செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, நீங்கள் உங்களுடைய மனதில் உற்சாகமாக இருப்பீர்கள், செவ்வாய் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இடமாற்றம் ஏற்படும். குரு பெயர்ச்சி ஏற்பட உள்ளது. குரு பத்தில் வந்தால் பதவியில் மாற்றம் முன்னேற்றம் வரும். கர்ம ஸ்தானம் பத்தில் குரு சுப கிரகம் வந்தால் புதிய மாற்றம் வரும். இடமாற்றத்திற்கு ஏற்ற மாதம். சனி 10,11ஆம் இடத்தின் அதிபதி, சனி 10ஆம் வீட்டில் குரு உடன் இணைகிறார். குரு சனி ஒன்றாக இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்கும். நிறைய மாற்றம் நடைபெறும்.திருமணம் கைகூடும்சூரியன் ஏழு எட்டாம் இடத்தில் இருப்பதால் பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் வரலாம். வேலையில் மாற்றம், வீட்டில் இடமாற்றம் எற்படும். திருமணம் நடைபெறும் 17 நவம்பர் துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சுக்கிரன் பார்வையால் திருமண பந்தத்தை ஏற்படுத்தும். 2ல் ராகு 8ல் கேது இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.முதலீடுகளில் கவனம் தேவைஏழாம் வீட்டில் இருக்கும் புதன் பார்வையால் கல்வி வித்தை அதிகரிக்கும். மாணவர்களுக்கு நல்ல மாதம் புதன் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம், தீர விசாரித்து முடிவெடுப்பது நல்லது. முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. பயணங்களுக்கான காலமாக இருக்கிறது. தெரியாத நபர்கள் மூலம் வரும் எதையும் முன் யோசனை இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.குரு பார்வையால் யோகம்உங்க ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் நீசம் பெற்றிருக்கிறார். சூரியன் ஆறாம் வீட்டில் நீசமடைந்து சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ராசிக்கு விரைய ஸ்தான அதிபதியும் ஏழாம் அதிபதியுமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருந்து உங்க ராசிநாதன் சுக்கிரன் மீது பார்வையை பதிக்கிறார். நவம்பர் மாத மத்தியில் நிகழும் குரு பெயர்ச்சி நன்மையை தரப்போகிறது குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. ஏற்கனவே உங்க ராசியில் ராகு சஞ்சரிக்கிறார். ராசியில் உள்ள ராகுவின் மீது குருவின் பார்வை கிடைப்பது யோகம்.புதன் சுக்கிரன் கூட்டணிஉங்களுடைய ராசிக்கு புதன் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சூரியன் அங்கே நீசமடைந்திருக்கிறார். சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மூலம் உதவியும் ஆதரவும் கிடைக்கும். சந்தோஷங்கள் அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதன் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் யோகம் கூடி வரும்.அதிர்ஷ்டமான மாதம்ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் கிடைக்கும். சனி பார்வை செவ்வாய் மீது விழுவதால் வேலையில் புதிய முன்னேற்றம், புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுடைய பலம் அதிகமாகும். தேவைகள் ஆசைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு இது நல்ல மாதம் உயர்கல்வி யோகம் வரும். மாத பிற்பகுதியில் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராகு நிறைய பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிப்பார். ராகு யோகத்தை கொடுப்பார். அதிர்ஷ்டகரமான மாதம்தன்னம்பிக்கை அதிகமாகும்மிதுனம் ராசிக்கு நவம்பர் மாதம் விஷேசமான மாதம். சுகங்கள் அதிகம் தரும் மாதம், கற்றுக்கொள்வதில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். அறிவாற்றல் கூடும். நீச பங்க ராஜ யோகம் கிடைக்கும். செவ்வாய் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சினைகள் நீங்கும். ஆற்றல் அதிகமாகும். ஏழாம் வீட்டில் இருந்து குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பது யோகம்.எதிர்ப்புகள் நீங்கும்மாத பிற்பகுதியில் குரு எட்டாம் வீட்டில் குரு சனி சேர்க்கை ஏற்படுகிறது. கணவன் மனைவி உறவில் கவனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் நீசமாக இருக்கிறார். எட்டில் குரு மறைந்திருக்கிறார். அதிர்ஷ்டங்கள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள். ராகு கேது உங்க ராசிக்கு நன்மைகளை செய்வார். எதிர்ப்பு பிரச்சினைகள் நீங்கும்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவைபுதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் உங்களுடைய வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பயணங்களின் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அலட்சியம் வேண்டாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பங்குச்சந்தையில் பணம் போடும் போது கவனமாக இருப்பது நல்லது. நவம்பர் மாதத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. விரக்தியை விட்டு விடுங்கள் விழிப்புணர்வோட இருந்தால் நிறைய சாதிக்கலாம்

No comments:

Post a Comment