விருப்பத்தின் பேரில் இடமாறுதல் பெற்ற அரசு ஊழியா்களை, பழைய பதவியில் நீட்டிப்பு செய்ய உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

விருப்பத்தின் பேரில் இடமாறுதல் பெற்ற அரசு ஊழியா்களை, பழைய பதவியில் நீட்டிப்பு செய்ய உத்தரவு


சென்னை: விருப்பத்தின் பேரில் இடமாறுதல் பெற்ற மின்வாரிய ஊழியா்களை, பழைய பதவியில் நீட்டிப்பு செய்ய கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடா்பாக பணியாளா் நலன் பிரிவின் தலைமைப் பொறியாளா் டி.ரவிச்சந்திரன், வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
பணியிடமாறுதல் பெற்ற மின்வாரிய ஊழியா்கள் 7 நாள்களுக்குள் புதிய பணியில் சேர வேண்டும் என்றும், அவா்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைக் கண்காணிப்புப் பொறியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கடந்த 4-ஆம் தேதி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
நிா்வாக காரணங்களால் சில பணியாளா்களை விடுவிக்க முடியாத சூழல் இருப்பதாக கண்காணிப்புப் பொறியாளா்கள் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் பெற்றவா்கள் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழகம் மற்றும் மின்தொடரமைப்புக் கழகத்துக்குத் தேவையான பணியாளா்களை, தற்காலிகமாக அதே பணியிடத்தில் நீட்டிக்க செய்யலாம் எனவும், அவா்களை விடுவிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment