அண்ணா பல்கலை... ஆன் லைன் தேர்வு விதிமுறைகள்... கீ போர்டு இல்லை... மவுசு மட்டும்தான்!! - ஆசிரியர் மலர்

Latest

21/09/2020

அண்ணா பல்கலை... ஆன் லைன் தேர்வு விதிமுறைகள்... கீ போர்டு இல்லை... மவுசு மட்டும்தான்!!


 ஆன் லைன் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த நடைமுறை விதிகளை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 30% மதிப்பெண் தியரிகளுக்கும், 50% மதிப்பெண் சிஜிபிஏவுக்கும், 20% இன்டர்னல் மதிப்பெண் ஆகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தேர்வு ஏ, பி என இரு பிரிவுகளாக நடத்தப்படும். இதில் ஏ பிரிவில் 15 ஒரு மதிப்பெண் கேள்விகளும், 25 இரண்டு மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும்.தேர்வு எழுத 60 நிமிடங்கள் ஒதுக்கப்படும். கொடுக்கப்பட்டு இருக்கும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக லாக் இன் செய்து கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பத்து நிமிடங்களுக்குப் பின்னர் லாக் இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். .. இணையத்தில் இருந்து மாணவர்கள் தங்களது பாஸ்வேர்டை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் இரண்டு முறையிலான அதாவது மாதிரி தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கும் இருக்கும். இந்தத் தகவல்கள் அனைத்தும் மாணவர்களுக்கும் அவர்களது இ மெயில் வாயிலாக பகிரப்படும். மாணவர்கள் தங்களது புகைப்படத்தையும், ஏதாவது அரசு அடையாள அட்டையையும் சமர்பிக்க வேண்டும். கல்லூரி அடையாள அட்டையும் அவசியம் பகிர வேண்டும். தேர்வின்போது மாணவர்கள் கீ போர்டு பயன்படுத்த அனுமதிக்கபட மாட்டார்கள். மவுஸ் துணையுடன் பதில்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். மைக்ரோ போன் மற்றும் கேமரா ஆன் செய்ய வேண்டும். ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் முறையில் மாணவர்களின் முகம், கண் மற்றும் அவர்களது நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்'' என்று தெரிவிக்கபப்த்டுள்ளது.பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459