பல்கலைக்கழக இறுதித் தேர்வை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்க கோரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பல்கலைக்கழக இறுதித் தேர்வை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்க கோரிக்கை


பல்கலைக்கழக இறுதித் தேர்வை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்க மேகாலய அரசு கோரிக்கை

நடைபெற உள்ள பல்கலைக்கழக இறுதித் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திலிருந்து அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்க பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மேகாலய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதித் தேர்வுகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில அரசுகளை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் மேகாலய மாநில அரசு வியாழக்கிழமை யூஜிசிக்கு எழுதிய கடிதத்தில் அக்டோபர் மாதம் வரை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்தும் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரியுள்ளது.
கரோனா தொற்றுநோயால் மாணவர்கள் தேர்விற்கு மனரீதியாக தயாராக இல்லாததால் இந்தக் காலநீட்டிப்பு கோரப்படுவதாக மாநில கல்வி அமைச்சர் லஹ்மென் ரிம்புய் தெரிவித்தார். இது தொடர்பாக புதன்கிழமை முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அக்டோபர் 7, 9, 12, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மேகாலய அரசு யூஜிசியைக் கேட்டுக்கொண்டுள்ளது.
“மனதளவில் தயாராக இல்லாததால் மாணவர்களிடையே ஒரு கவலை உள்ளது. தேர்வுகளை நடத்துவதில் ஒரு மாத கால இடைவெளி அவர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற உதவும் ”என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக செயல்பட்டு வரும் பள்ளி வளாகங்களை காலி செய்யுமாறு 11 மாவட்டங்களின் துணை ஆணையர்களை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a comment