புதிய கல்விக்கொள்கையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையதள பிரச்சாரம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

புதிய கல்விக்கொள்கையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையதள பிரச்சாரம்புதிய கல்விக்கொள்கையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையதள பிரச்சாரம்

தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர்.
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும்
தமிழக அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் அறிவியல் இயக்கம் சார்பில் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி சமூக வலைத்தளங்களில் பதிந்து வருகின்றனர்.
மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்ட தலைவர் மகேஷ், மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டப் பொருளாளர் மணிமேகலை மற்றும் ஜெகநாதன், கமல், காளிதாஸ், முத்துக்கண்ணன், வெங்கட்ராமன், சதீஸ், முத்துப்பாண்டி உள்ளிட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.
இதன்தொடர்ச்சியாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு, இணையவழிக் கருத்தரங்குகள், மின்னஞ்சல் இயக்கம் போன்றவைகளையும் நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a comment