தமிழக அரசு வெளியிட்ட மென்திறன் புத்தகத்தால் சர்ச்சை - ஆசிரியர் மலர்

Latest

02/09/2020

தமிழக அரசு வெளியிட்ட மென்திறன் புத்தகத்தால் சர்ச்சை


சென்னை:  தமிழ்நாடு அரசின் மென்திறன் புத்தகத்தில் 44 சதவீத தகவல்கள் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்காக 223 பக்கங்கள் கொண்ட ஆங்கில மென்திறன் பயிற்சி புத்தகத்தை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் 44 சதவீதம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது பத்திரிகை தகவல்கள், மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அப்படியே புத்தகத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே வெளியிட்டுள்ள புத்தகத்தில் இலக்கணப் பிழை இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், தற்போது இணைய தகவல்கள் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து முதல்வரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கான புத்தகம் தரமில்லாமல் அவசரகதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459