அரியர் தேர்வு ரத்து : ஏஐசிடிஇ நிலைப்பாடு என்ன? - ஆசிரியர் மலர்

Latest

09/09/2020

அரியர் தேர்வு ரத்து : ஏஐசிடிஇ நிலைப்பாடு என்ன?

தமிழக கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரியர் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்துள்ள போதிலும், கல்வியாளர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே, பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) மறுப்பு தெரிவித்து இமெயில் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார். .ஐ.சி.டி.இ. எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என தகவல் தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை
ஏ.ஐ.சி.டி.இ.
கருத்தாக திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கண்டனம் தெரிவித்தார்.
TN Online Classes: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: ஆன்லைன் வகுப்புகள் கட்!
அதேசமயம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு ஏ.ஐ.சி.டி.இ. தலைவர்
அனில் சஹஸ்ரபுத்தே
சார்பில் அனுப்பபட்ட இமெயில் வெளியில் கசிந்தது. அதில், தேர்வுகள் எழுதாமல் மதிப்பெண்கள் வழங்குவதையும், பட்டம் பெறுவதையும் ஏற்க முடியாது என்றும், பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால்,
அரியர் தேர்வு
தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப குழுமத்திற்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில், அரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவு தவறானது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால், என்னிடம் இருந்து தமிழக அரசுக்கோ, தமிழக அரசிடம் இருந்து எனக்கோ எந்த கடிதமும் வரவில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அனில் சஹஸ்ரபுத்தே, இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது , ஏ.ஐ.சி.டி.இ.-யின் நிலைப்பாடு குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459