மத்திய அரசு ஓய்வூதியதாரா்களுக்கு, வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் - ஆசிரியர் மலர்

Latest

12/09/2020

மத்திய அரசு ஓய்வூதியதாரா்களுக்கு, வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசம்


மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு ஓய்வூதியதாரா்களுக்கு, வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
வழக்கமாக மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள், வாழ்வுச் சான்றிதழை நவம்பரில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். இப்போது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரா்களும், வாழ்வுச் சான்றிதழை நவம்பா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை சமா்ப்பிக்க முடியும் என்று அவா் கூறினாா்.
இருந்தபோதும், பணியாளா் துறை அமைச்சகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள் வாழ்வுச் சான்றிதழை அக்டோபா் 1 முதல் டிசம்பா் 1 வரை சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, கரோனா அச்சுறுத்தல் காரணமாக வங்கிகளும் ஓய்வூதியதாரா்களின் வாடிக்கையாளா் அடையாள சரிபாா்ப்பு நடைமுறைகளை காணொலி வழியில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459