யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி - ஆசிரியர் மலர்

Latest

28/09/2020

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி


யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி பதில் அளித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று மற்றும் வட, வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தேர்வர்கள் 20 பேர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.  முந்தைய விசாரணையில், தேர்வை ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசும், தேர்வை நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இன்று நடைபெற்ற விசாரணையில், சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என யுபிஎஸ்சி பதில் அளித்துள்ளது. மேலும், தேர்வை ஏன் ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிட்டு, பிரமாணப்பத்திரம்  தாக்கல் செய்ய யுபிஎஸ்சி -க்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459