இணையவழி வகுப்புகளுக்கான அட்டவணையை சமர்ப்பிக்க உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இணையவழி வகுப்புகளுக்கான அட்டவணையை சமர்ப்பிக்க உத்தரவு

இணையவழி வகுப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் இணைய வழியில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து விதமான பள்ளிகளிலும் இணைய வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மன உளைச்சலால் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பதால் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் குறித்த அட்டவணையை சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், இணையவழியில் ஒவ்வொரு வகுப்புக்கான அட்டவணை, ஆசிரியர்கள் எடுத்த வகுப்பு விவரங்களை பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இணையவழி வகுப்பு விவரங்களை முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதலை பள்ளிகள் பின்பற்றுவதை முதன்மை கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும். இணையவழி வகுப்புகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புகார்கள் இருந்தால்  grievencesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a comment